மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்றால், நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்படுவதாக பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் கூறியுள்ளார்.

மேலும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டிலிருந்து வந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண இது உதவும் என்றும் தெரிவித்தார்.

"வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் எதிர்காலத்தில் அதிகரிக்கும். நாங்கள் இப்போது அதற்காக வேலையை ஆரம்பித்திருக்கின்றோம் ” என பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் கூறியுள்ளார்.