தனது சுறுசுறுப்பான நடிப்பினாலும், சமூக நலன் கொண்ட கருத்துக்களினாலும் மக்களின் மனதில் நீங்கா இடத்தினைப் பிடித்தவர் தான் நடிகர் விவேக்.
ஏராளமான முன்னணி நடிகர்கள் வலம்வந்தாலும் தனக்கென பாணியில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை வைத்திருந்ததோடு, தனக்கென தனி இடத்தினையும் பிடித்திருந்தார்.
சினிமா மட்டுமின்றி சமூக அக்கறை கொண்ட விவேக் அப்துல்கலாமின் நினைவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒரு மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை கனவாக வைத்த விவேக் 33 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கோரானா காரணத்தால் மாஸ்க் போடுவதற்காக பல விழிப்புணர்வு ஏற்படுத்திய இவர், கடந்த 17ம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இவரது உயிர் உலகத்தை விட்டு சென்றாலும் இவரது நினைவுகள் எக்காலத்திலும் மறையாமல் ரசிகர்களிடையே இருந்து வருகின்றது. இவர் மறைந்த 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருவதோடு, இவருடனான தன் நினைவுகளை பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விவேக்கின் அஸ்தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் மரியாதை செய்துள்ளனர்.
அதன்பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் விவேக்கின் அஸ்தியை வைத்து தோண்டப்பட்ட குழியில் மலர்களை தூவிய உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர்.விவேக்கின் கனவே 1 கோடி மரங்களை நடுவது தான். இப்படி இருக்க அவரது அஸ்தியிலும் ஒரு மரக் கன்றை வைத்து அவரது குடும்பத்தினர் ஆத்மாவை குளிர வைத்துள்ளனர்.