மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.



மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே வசாயில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் காயமடந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே, நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் பலியானது நினைவிருக்கலாம்.