முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
18 மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு, மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று மாலை கனமழையும் மின்னல் தாக்கமும் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 3 விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
வயல் வெளியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு
- Master Admin
- 16 April 2021
- (572)

தொடர்புடைய செய்திகள்
- 14 June 2020
- (508)
கேகாலை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் ப...
- 27 March 2024
- (326)
கஜ கேசரி யோகம்: இந்த ராசியினருக்கு வெற்ற...
- 13 November 2020
- (371)
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு
- 13 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.