இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். இம்மாநிலத்தில் மட்டும் 47190 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலிவுட் பிரபலங்கள் சிலருக்கும் கொரோன வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோன வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் பின் அவர் சிகிச்சைக்கு பின் குணமாகி வீடு திரும்பினார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமன்றி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று பேர்களுக்கு கொரோன வைரஸ் பாதிப்பு அடைந்ததை அடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் கிரண்குமார் என்பவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோன சோதனை செய்யப்பட்டபோது அவருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் உள்ள தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.