ஐபொரஸ்ட் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

கந்தபளை நுரரெலியா இராகலை பிரதான வீதித்தின் கொங்கோடியா தோட்டப் பகுதியில் இன்று (07) அதிகாலை 04 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமுற்று நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ள்ளதுடன் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமாகியுள்ளது. 

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான காரணம் என் தெரிவித்த கந்தபளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.