தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு  3,500 பஸ்களை விசேட சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், முதலீட்டு அபிவிருத்தி வலயங்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

சேவை புரியும் தொழிற்சாலைகளில் இருந்து சொந்த இடங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் கொழும்பில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறைக்கப்படும். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்க முடியும்.

இதேவேளை, தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 09 ஆம் திகதி தொடக்கம் பதுளை, யாழ்ப்பாணம், குருணாகல், அநுராதபுரம், பெலிஅத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது