சீனாவிலிருந்து பெறப்பட்ட கொரோனா தடுப்பூசி இன்று (05) முதல் இலங்கைக்கு வழங்கப்படும் என்று பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இருப்பினும், இந்த தடுப்பூசி முதலில் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு வழங்கப்படும்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசியின் ஆறு இலட்சம் டோஸ் இலங்கைக்கு கடந்த மாதம் 31 ஆம் திகதி கொண்டு வரப்பட்டது.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கால் இந்த தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.