இலங்கையில் களிமண்ணிலிருந்து முகத்தை அழகாக்கும் கிரீம்கள் மற்றும் பிற அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கலாம் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணவீர இதை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்படும் தரமான பொருட்களின் உற்பத்தியின் மூலம் உலகை வெல்ல முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் நாட்டிற்கு தேவையான வெளிநாட்டு நாணயத்தைப் பெறவும், தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பாரம்பரிய தொழிலதிபர்களுக்கு உலகளாவிய இலக்குகளை அடைய தேவையான அறிவு வழங்கப்பட வேண்டும் என்றும் புதுமை மூலம் உலகை வெல்ல முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.