கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில்  20 நாட்களான குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய  பிரியந்த ஜயவர்தன எல் டீ பீ தெஹிதெனிய காமினி அமரசேகர  யசந்த கோதாகொட மற்றும் குமுதினி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தனிப்பிட்ட காரணங்கள் காரணமாக தாம்  குறித்த மனுவில் இருந்து விலகுவதாக நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த மனுமீதான பரிசீலனை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் குறித்த மனுவினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது