யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை கடல் எல்லையில் சில வகையான ஆல்காக்கள் எனப்படும் பாசி வேகமாக பரவுகின்றன.
இது குறித்து மீனவர்கள் யாழ்ப்பாண மீன்வள ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலியியல் கடற்பாசி ஆய்வுத்துறை(Algology) அல்லது பாசியியல்(Phycology) என்பது ஆல்காக்கள் அல்லது பாசிகள் பற்றிய அறிவியல் துறை ஆகும்.
இது உயிர் அறிவியல் துறையின் கீழ் உள்ள தாவரவியல் துறையை சார்ந்தது.
ஆல்காக்கள் நீர் சூழ்நிலை உள்ள மண்டலத்தில் வளர்கின்றன. பெரும்பாலான ஆல்காக்கள் ஈரப்பதமான இடத்தில் வாழும் உண்மையான உட்கரு உடைய ஒளிச்சேர்க்கை புரியும் உயிரியாகும்.
இதன் உடல் வேர், தண்டு இலை என்று உயர் தாவரங்களைப்போல் வேறுபடுத்தி அறியமுடியாத தாலசு என்ற அமைப்பை உடையது.
இவை பூவாத்தாவர வகையைச் சார்ந்தது. என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவப் படலம் தென்படுவதாக யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் திரவப் படலத்தின் மாதிரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவால் நேற்று மாலை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.