பிரித்தானியா தலைநகர் லண்டனில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்பரி சாலையில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டனர் என்று பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் ஒருவர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், ஆனால் மருத்துவ சிகிச்சை தேவையில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸ் அளித்த தகவலின் படி, இரவு 11:40 மணிக்கு கிங்ஸ்பரி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அவசர சேவைக்கு அழைப்பு வந்தது.
சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர சேவை குழுவினர், தாக்குதலில் காயமடைந்து கிடந்த 17 வயதுடைய இரண்டு இளைஞர்களுக்கு சம்பவயிடத்தில் முதலுதவி அளித்தனர், பின் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.