இந்து ஆலயமொன்றில் கொவிட் கொத்தணி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் – மஸ்கெலிய பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயமொன்றிலேயே இந்த கொத்தணி உருவாகியுள்ளதாக மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆலயத்தில் 11 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏனைய 11 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்துடன் தொடர்புகளை பேணிய 35 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.