இந்தியாவின் மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் பஸ் - ஓட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் புரானி சாவ்னி பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, எதிரே வந்த ஓட்டோ மீது மோதியது.
இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 8 பெண்கள், ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மேலும் 4 பெண்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.