குருணாகல், பெரகும்பா வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் வாழைப்பழம் வாங்க வருகை தந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரை உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தி கொலை செய்துள்ளார். 

வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.