நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள IPC376 படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

IPC 376 Movie Trailer : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவரை பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக நாயகியை மையப்படுத்திய கதையான IPC376 என்ற படத்தில் போலீசாக நடித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஆக்சன், திகில், த்ரில்லர் என அனைத்தும் கலந்த பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது ட்ரெய்லரில் உறுதியாகியுள்ளது.

இதனால் இந்த ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த IPC 376 படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்க யாதவ் ராமலிங்கம் இசை அமைத்துள்ளார். பவர் கிங் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக எஸ் பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

நந்திதா ஸ்வேதாவுடன் மதுசூதன் ராவ், மகாநதி சங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

\