அந்தமானில் ஒரு மல்டிட்ரக்-எதிர்ப்பு உயிரினமான கேண்டிடா ஆரிஸின் (Candida auris) தெளிவான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலை மற்றும் உருமாறிய கொரோனா என அதன் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. என்னதான் தடுப்பூசி விநியோகம் இருந்தாலும் பாதிப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் உருமாற்றமடைந்த வைரஸால் பரவல் வேகமெடுத்துள்ளன. இதனால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த இன்னல்களுக்கு இடையே, விஞ்ஞானிகள் நாட்டின் தொலைதூர மணல் கடற்கரையான அந்தமானில் ஒரு "சூப்பர்பக்" தடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இது அடுத்த கொடிய தொற்றுநோயைத் ஏற்படுத்தக்கூடும் என்ற ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அந்தமானில் ஒரு மல்டிட்ரக்-எதிர்ப்பு உயிரினமான கேண்டிடா ஆரிஸின் (Candida auris) தெளிவான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கேண்டிடா ஆரிஸ் ஒரு 'சூப்பர் பக்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சையை எதிர்க்கும் தன்மைக் கொண்டது. இந்த ஆய்வு மார்ச் 16 அன்று mBio இதழில் வெளியிடப்பட்டது. அதில் COVID-19 தொற்றுநோய் கேண்டிடா ஆரிஸின் பரவலான பாதிப்புகளுக்கு சரியான நிலைமைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அனுராதா சவுத்ரி தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளைச் சுற்றியுள்ள எட்டு இயற்கை இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 48 மண் மற்றும் நீரின் மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில், ஆராய்ச்சி குழு சுமார் இரண்டு இடங்களில் இருந்து கேண்டிடா ஆரிஸை பிரித்தெடுத்து தனியாக ஐசோலேட் செய்துள்ளது. அந்த இடங்களில் ஒன்று உப்பு சதுப்புநில ஈரநிலம், இது மக்கள் எப்போதாவது பார்வையிடும் பகுதி ஆகும். மற்றொன்று, அதிகமான மக்கள் பார்வையிடும் கடற்கரை பகுதி என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக லைவ் சயின்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, " கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட கேண்டிடா ஆரிஸ் தனிமைப்படுத்தல்கள் அனைத்தும் மல்டி ட்ரக் எதிர்பாளர்களாக உள்ளன.
சதுப்பு நிலத்தில் கண்டறியப்பட்ட ஆரிஸ் தனிமைப்படுத்தல்கள், தற்போது மருத்துவமனைகளில் காணப்படும் கொரோனா விகாரங்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவை" என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல, உப்பு சதுப்பு நிலத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட கேண்டிடா ஆரிஸ் ஒரு மருந்து எதிர்ப்பான் அல்ல என்றும் மற்ற தனிமைப்படுத்தல்களுக்கு மாறாக அதிக வெப்பநிலையில் மெதுவான வேகத்தில் இவை வளர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தற்போது ஆராய்ச்சியாளர்களால் ஐசோலேட் செய்யப்பட்ட 'சூப்பர்பக்', ஒரு வைல்டர் விகாரமாக இருக்கக்கூடும் என்று ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் மூலக்கூறு நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் தலைவர் டாக்டர் ஆர்ட்டுரோ காசடேவால் கூறியதாவது, "இந்த ஐசோலேட் செய்யப்பட்ட சி.ஆரிஸ் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் வெப்பநிலைக்கு இன்னும் பொருந்தாத ஒன்றாக இருக்கலாம் என்று விளக்கினார். இருப்பினும், 'சூப்பர்பக்' இயற்கையாகவே தீவுகளில் வாழ்ந்ததா அல்லது அது அங்கு தோன்றியதா என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்க முடியவில்லை.