இந்த வருடத்தின் சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீரை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மஹாவலி நீர் முகாமைத்துவ செயலகம் இதனை அறிவித்துள்ளது.

கடந்த வருடம் பெய்த மழை காரணமாக தற்போது பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக அந்த செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனவே இந்த முறை சிறுபோக பயிர்ச்செய்கையை துரிதமாக ஆரம்பிக்குமாறு நீர் முகாமைத்துவ குழு, விவசாயிகளிடம் கோரியுள்ளது.