செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன், விவசாயி. இவரது அண்ணன் கோதண்டம் (வயது 60). இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோதண்டம் குடிபோதையில் வீரராகவன் வீட்டின் முன்நின்று அவரது மனைவி மஞ்சுளாவை (45) தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் மஞ்சுளாவுக்கும் கோதண்டத்துக்கும் தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கோதண்டம் திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் மஞ்சுளாவை வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து கோதண்டத்தை கைது செய்தனர்.