விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபிநாத்தின் தோழியாக, ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஜெனிபர்.
இவரது நடிப்பு ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் அவரது அமைதியான குணங்கள் மற்றும் அழகிய சிரிப்பால் அனைத்து இல்லதரசிகளின் மனதை கவர்ந்து விட்டார்.
இவரை பார்ப்பதற்காகவே சீரியல் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். இந்நிலையில், சீரியலில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தலகளிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளவர் ஜெனிபர்.
மேலும், இன்று திருமண நாளை கொண்டாடும் ஜெனிபர் அவரது கணவருடன் உள்ள அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.