விஜய் தேவரகொண்டாவின் லேட்டஸ்ட் போட்டோ செம கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தமிழில் நோட்டா என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படமும் விஜய் தேவரகொண்டாவிற்கு நல்ல வெற்றியை கொடுத்தது.

எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் வித்தியாசமான வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என வருகை தருவதே விஜய் தேவரகொண்டாவின் ஸ்டைல்.

 

அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாதது போல ஒரு புதிய லுக்கிற்கு மாறி உள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வர அது ரசிகர்கள் மத்தியில் செம ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

தந்தையர் தினத்தில் தன் அப்பாவுடன் இதே கெட்டப்பில் தான் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்