பிரித்தானியாவில், ஒரு குறிப்பிட்ட அழகு நிலையத்திற்கு பின்னால் அடிக்கடி சில ஆண்கள் செல்வதை கவனித்த பொலிசார், இரகசியமாக அவர்களை கண்காணித்திருக்கிறார்கள்.

அப்படி சென்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்.

ஆகவே, பொலிசார் அவர்களை இரகசியமாக கண்காணித்தபோது, கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள அந்த அழகு நிலையத்துக்கு பின்னால் அவர்கள் சென்றதும், அழகு நிலைய ஊழியரான ஒரு பெண் வெளியே வந்து, தன் உள்ளாடைக்குள்ளிருந்து எதையோ எடுத்துக் கொடுப்பதை கவனித்துள்ளனர்.

அந்த அழகு நிலையத்தின் உரிமையாளரான Samantha Cox (30), வெறும் 5,000 பவுண்டுகள் மட்டுமே சம்பாதித்துவந்தாலும், 50,000 பவுண்டுகள் மதிப்புள்ள காரை பயன்படுத்துவதும் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், அந்த அழகு நிலையம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துவோர் அந்த அழகு நிலையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட தொலைபேசிக்கு அழைப்பார்களாம். பின்னர் அவர்கள் அழகு நிலையத்துக்கு பின்னால் சென்றால், Joanne Zblewska என்ற பெண் தன் உள்ளாடையில் மறைத்து வைத்திருக்கும் போதைப்பொருளை இரகசியமாக எடுத்து கொடுத்துவிடுவாராம்.

அழகு நிலையம் என்ற பெயரில் போதை வியாபாரம் செய்துவந்த Samantha கைது செய்யப்பட்டுள்ளார், அவருக்கு 5 ஆண்டுகள், 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Samantha, அவருக்கு உதவிய Joanne உட்பட, மொத்தம் ஆறுபேர் இந்த போதை வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.