மூன்று கொலைகளை செய்த தன் அம்மாவைப் போல் தானும் மாறிவிடுவேனோ என்ற அச்சத்தில் 13 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டே பெண்களில் ஒருவர் Joanna Dennehy.
ஒரு சீரியல் கில்லர் என அழைக்கப்படும் Joanna Dennehy, 2013-ஆம் ஆண்டில் 10 நாட்கள் இடைவெளியில் 3 பேரை பயங்கரமான ஜாம்பி கத்தியால் குத்தி ரசித்து ரசித்து கொடூரமாக கொலை செய்தவர்.
கொலை செய்துவிட்டு ஓவொரு சடலத்தையும் ஒவ்வொரு குழியில் வீசிச் சென்றவர். மேலும், 2 பேர் இவரிடம் கத்தியால் குத்தப்பட்டு உயிர்பிழைத்தனர்.
அச்சமயத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரை பொலிஸார் கைது செய்து, 2014-ல் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணையின்போது, கத்தியால் குத்திக் கொலை செய்யும்போது சந்தோசம் ஏற்படுவதாகவும், தனக்கு அந்த 'Fun' வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடக்கையில் Joanna-க்கு 5 வயதில் Shianne Treanor என்ற பெண் குழந்தை இருந்துள்ளார்.
இப்போது Shianne Treanorக்கு 13 வயது ஆன நிலையில், அவரது தாயைப் பற்றியும், அவர் செய்த கொடூரமான குற்றங்களையும் அறிந்து கொண்டார்.
தன் அம்மாவின் சுயரூபத்தைப் பற்றி முதல் முதலில் கேட்ட Shianne Treanor தரையில் விழுந்து கதறி அழுதுள்ளார். உண்மைகள் தெரியவந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வியாக, "நானும் அம்மாவைப் போல மாறிவிடுவேனா?" என்று தான் கேட்டுள்ளார்.
அந்த அளவிற்கு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட Shianne Treanor, சில நாட்களாக மனச்சோர்வு, பதட்டம், சித்தப்பிரமை போன்ற மனநோய்களுக்கு ஆளானார்.
ஒரு கட்டத்தில், தான் நிச்சயம் தன் அம்மாவைப் போல ஒரு சீரியல் கில்லராக மாறிவிடுவேன் என நம்ப ஆரம்பித்த அவர், யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்ற பயத்தில், இதை இப்போதே நிறுத்திவிட வேண்டும் என நினைத்து தற்கொலைக்கு முயற்சிசெய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், அவருக்கு இப்போது மனநல மருத்துவர்கள் மூலம் முறையான கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.