பிரித்தானியாவில் நிர்வாணமாக சாலையில் சென்ற தம்பதியை பிடித்த பொலிசார் லாக்டவுன் விதியை மீறியதாக கூறி அபராதம் விதித்துள்ளனர். Norfolkல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜோடி ஒன்று நிர்வாண நிலையில் சுற்றி வந்ததையடுத்து பொலிசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் லாக்டவுன் விதியை மீறியதாக கூறி £200 அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து தற்காலிக பொலிஸ் கண்காணிப்பாளர் நாதன் கிளார்க் கூறுகையில், ஆடைகள் இல்லாத நிலையில் ஒரு ஜோடி செல்வதை கண்டு அவர்களை பிடித்தோம்.
கொரோனா லாக்டவுன் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தோம்.
சமீபத்திய பனி மற்றும் உறைபனி வெப்பநிலையைத் தொடர்ந்து மக்கள் வெளியில் செல்ல விரும்புவார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால் லாக்டவுன் இன்னும் தேவையான இடங்களில் நடைமுறையில் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என கூறியுள்ளார்.
கடந்த 12ஆம் திகதியில் இருந்து இதுவரை லாக்டவுன் விதியை மீறியதாக Norfolk பொலிசார் 59 பேருக்கு அபராதம் விதித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.