கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் இன்று (புதன்கிமை) மாலை 5.07 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று மாலைதீவில் இருந்து 169 பேரும், பிரித்தானியாவில் இருந்து 154 பேரும் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.