வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டு மக்களின் உறவினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் நாட்டிற்குள் வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.