கோவை: ஆன்லைன் ஆப் மூலம் விவசாயிகளிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விளைபொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சுந்தரராஜ் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அன்னூரைச் சேர்ந்த சுந்தராஜ் என்பவரிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலான உளுந்து கொடுத்த விவசாயி அன்னூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.