சில்லுக்கருப்பட்டி படத்தை தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கி இருக்கும் புதிய படம் ஏலே. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சமுத்திரகனி பேசும்போது, பெரிய படைப்பான ஏலே படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் புதுப்புது முகங்கள், புதுப்புது சத்தங்கள் கேட்டது மகிழ்ச்சி. படப்பிடிப்புக்கு சென்ற முதல் 8 நாட்கள் என்னை பிணமாக்கி விட்டார்கள். நான் பிணமாக இருக்கும் காட்சியை படமாக்கினார்கள். ஹலீதா சிறப்பான இயக்குனர். பல இடங்களில் அவரை வியந்து பார்த்து இருக்கிறேன்.
இப்போ இருக்கிற ஹலீதாவை நான் 40 நாட்கள் பார்க்கவில்லை. 40 நாட்களும் சாமி ஆடினார்கள். ஆனால், சிரித்துக் கொண்டே சாமி ஆடினார்கள் என்றார்.