இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாக இருக்கும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி கிடைத்த பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் மூலம் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.