தர்மபுரி அருகே உள்ள மணிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 16). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்புகள் தொடங்கின.
இந்த நிலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்ற சந்தோஷ் வீடு திரும்பிய பின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.