மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். 

சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளான இன்று வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ள தலைவி படக்குழு,  அதோடு புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனாவும் ரொமாண்டிக் போஸ் கொடுத்தபடி இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.