மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்மை விட்டு வௌியேறும் 11 இடங்களில் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது 326 பேருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.