பிக்பாஸ் சீசன் 4 தமிழில் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்த வார இறுதியில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். சோம் நேரடியாக ஃபைனலுக்கு தேர்வாகிவிட்டார். ரம்யா, பாலா, ஆரி, ரியோ, கேப்ரியல்லா ஆகியோர் தற்போது உள்ளே இருக்கிறார்கள்.
ஹிந்தியில் சீசன் 14 தொடங்கி 94 நாட்களாகிவிட்டது. நடிகர் சல்மான் கான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் போட்டியாளராக பங்கேற்றார். உள்ளே இருக்கும் அவர் இதுவரை வேடிக்கையாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார் என ரசிகர்களின் கருத்து.
இந்நிலையில் அவரின் அம்மா வீடியோ கால் மூலம் ராக்கியிடம் பேசுகிறார். ராக்கி சிரித்து பேசுகிறார். ஆனால் சக போட்டியாளர்கள் அதிர்ந்து போயினர். பின்னர் தான் தெரிந்தது அவரின் அம்மா மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் நிலை கண்ட ராக்கியை சமாதான படுத்த இயலவில்லையாம். ஆனாலும் ராக்கியை அவரின் அம்மா உற்சாகமூட்டினாராம்.