ஊவாமாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று :

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானகடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்துவீசக்கூடும்.

காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.