முசிறி அருகே உள்ள காமாட்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா.


இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஜீவா, கடந்த 3-ந்தேதி வீட்டில் விளையாடிகொண்டிருந்தபோது ஜூஸ் என நினைத்து தவறுதலாக மண்எண்ணெயை குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குழந்தையை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.