கனடாவில் இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அல்பெர்டாவில் தான் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி நடந்துள்ளது. Louanne Martha Cardinal (29) என்ற பெண் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் அவரின் சடலத்தை கைப்பற்றினர்.

இது தொடர்பான விசாரணையில் Trevor Moyah (23) என்பவர் தான் Louanne-வை கொலை செய்தார் என தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று பொலிசார் அவரை கைது செய்தனர்.

இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையில் Trevor வரும் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர்.