கனடா நாட்டின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில் நடைபெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாகனர் . இந்த தகவலை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கிராண்டே ப்ரைரி நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், ராபின்சன் ஆர் 44 என்ற ஹெலிகொப்டர் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகியது. அப்போது இந்த விபத்தில் இரு பெரியவர்களும், இரு குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.