விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #మాస్టర్, #VijayTheMaster உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளுக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எமோஜிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கு முன்னர் விஜய்யின் மெர்சல், பிகில் படங்களுக்கு டுவிட்டர் பிரத்யேக எமோஜியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.