புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அச்சம் காரணாக தென்னாப்பிரிக்கா நாட்டில் மது விற்பனைக்கு அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் உலக நாடுகளை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது. இதனால், அனைத்து நாடுகளும் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இங்கிலாந்து நாட்டிற்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் இருந்து தென்னாப்பிரிக்கா வந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா நாட்டில் மது விற்பனைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், எந்தவொரு வைரஸையும் எதிர்த்துப் போராடுவதில் அவர்களது உடல் பலவீனமாக இருக்கும் என்றும், இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மதுவை அரசு தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.