தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதனால், அதிமுக-வுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மக்கள் நீதியம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான்’ என தெரிவித்தார்.
நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான் - முதலமைச்சர் பழனிசாமி#EdappadiPalaniswami | #KamalHaasan pic.twitter.com/ocE5qVGNe9
— Thanthi TV (@ThanthiTV) December 28, 2020