இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம் பெரிதும் உதவுகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.
* தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.
மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.