இன்று (23) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 428 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 193 பேர் களுத்துறை மாவட்டம், 101 பேர் கொழும்பு மாவட்டம், 42 பேர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 91 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.
இன்று (23) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,377 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 25,892 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 31,318
அதன் பிரகாரம் (22) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,058 ஆகும். அவர்களில் 29,299 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (22) ஆம் திகதி வரை 8,576 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (23) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 618 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (23) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 07 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் வெளிகடை சிறைச்சாலை, தர்கா நகர், கொழும்பு 07, கொழும்பு 10, கொழும்பு 15,மக்கொன மற்றும் தங்கொடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள். அந்த வகையில் இன்று காலை (23) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 183 ஆகும்.
இன்று (23) காலை மாலைத்தீவுகள் இருந்து UL 104 விமானம் ஊடாக 14 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 20 பயணிகளும் இந்தியாவில் இருந்து 6E 9034 விமான ஊடாக 14 பயணிகளும் கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 04 பயணிகளும் ஐக்கிய இராஜ்சியத்தில் இருந்து UL 226 விமானம் ஊடாக 44 பயணிகளும் இந்தோநேசியாவில் இருந்து UL 1365 விமானம் ஊடாக 05 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இன்று (23) இந்தியாவில் இருந்து UL 1042 விமானம் ஊடாக 38 பயணிகளும் மாலைத்தீவுகளில் இருந்து UL 102 விமானம் ஊடாக 01 பயணியும் பங்களாதேஷில் இருந்து UL 190 விமானம் ஊடாக 25 பயணிகளும் சிங்கபூரில் இருந்து UL 303 விமானம் ஊடாக 10 பயணிகளும் சீனாவில் இருந்து UL 881 விமானம் ஊடாக 04 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து EK 648 விமானம் ஊடாக 16 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து EY 264 விமானம் ஊடாக 50 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (23) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 72 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,292 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (22) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 11,672 ஆகும்.