வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றுவருவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸானது குளிர் காலநிலைக்கு பரவக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என்பதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நுவரெலிய நகர மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி நுவரெலியா மா நகருக்கு வருகின்றவர்கள் ஒருபோதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் படவில்லை என்று பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த எழுத்து மூல அனுமதி இல்லாத எந்தவொரு நபருக்கும் நுவரெலியாவில் எந்தவொரு ஹோட்டல்களிலும் தங்குமிடம் வழங்கப்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக நுவரலியா மாநகரசபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.