கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் உள்ள பலா மரத்தில் அதிசய பலாப்பழம் ஒன்று காய்த்துள்ளது.
ஒரு தாய், தனது குழந்தையை மார்போடு சேர்த்து கட்டி அணைத்திருப்பது போன்று அந்த பலாப்பழம் மரத்தில் காய்த்து தொங்குவது பலரையும் கவர்ந்துள்ளது.
இதை பொதுமக்கள் அதிசயத்துடனும், அதே நேரத்தில் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர். சிலர் அதை தங்களது செல்போன், கேமராக்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.