ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள கெலான் மாவட்டத்தில் அதிகமான மக்கள் ஒரு வீட்டில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஒருவாரத்திற்குள் நடந்த 2-வது விபத்து இதுவாகும். இதற்கு முன் கடந்த 15-ந்தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் முக்கிய அதிகாரி உயிரிழந்தார்.