டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,547 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 6,11,994 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 2,734 குணமடைந்ததால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,88,586 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழக்க இதுவரை டெல்லியில் 10,147 பலியாகியுள்ளனர். தற்போது வரை 13,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.