அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.
இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலயம் அருகே கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபர் மீது துப்பாகிச்சூடு நடத்தினர். இதில் மர்ம நபர் காயம் அடைந்தார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.