இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொசாட் தளபதி படுகொலை செய்யப்பட்டதாக இணையத்தில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேல் நகரமான டெல் அவிவ்-ல் இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்து வீடியோவில், சிக்னலில் வெள்ளை நிற கார் ஒன்று நின்ற நிலையில், அந்த வாகனத்தை சூழ்ந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி சம்பவயிடத்திலிருந்து தப்பிக்கின்றனர்.

இதனையடுத்து, சம்பவயிடத்தில் காவல்துறை வாகனங்கள் குவிந்துள்ளது. இத்தாக்குதல், காரிலிருந்த நபர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் 45 வயதான இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொசாட் தளபதி Fahmi Hinavi கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறம் இணையத்திலும் இந்த வீடியோக்கள் தீயாய் பரவி வருகிறது. எனினும், இஸ்ரேலில் தரப்பில் தற்போது வரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

தங்களுடைய அதிமுக்கிய விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் Fahmi Hinavi படுகொலை செய்ததாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.