திருகோணமலை-தங்கநகர் இந்துக் கோயிலில் நாகபூசணி அம்மன் சிலை நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை - தங்கநகர் நாகம்பிரான் இந்து கோயில் கூரையால் இறங்கி சிலையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிலை கடந்த 5 மாதத்திற்கு முன்னர் கோயிலில் பூசை நடத்திக்கொண்டிருந்த போது தற்செயலாக கிடைக்கப்பெற்றதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தச் சிலை பற்றி தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து இது பித்தளையினால் செய்யப்பட்ட சிலை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சிலை திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.