பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையேனும் பொய் சொல்ல வேண்டிய தேவை அல்லது சூழலை சந்தித்திருக்கக்கூடும்.
வாழ்கை முழுவதும் பொய்யே சொல்லாமல் யாராலும் வாழவே முடியாது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இவர்கள் பேசும் எல்லா விடயங்களிலும் நிச்சயம் பொய் இருக்கும். அப்படி பொய் சொல்வதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் செயற்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் பொய்கள் அனைத்தும் கேட்பவர்கள் உண்மை என்று நம்பும் அளவுக்கு இருக்கும். கண் இமைக்கும் நேரத்துக்குள் பொய்களை கற்பனை செய்யக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு பிறப்பிலேயே அமைந்திருக்கும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே வசீக பார்வை மற்றும் முகத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று யாராலும் கண்டுப்பிடிக்கவே முடியாது. அந்தளவுக்கு உண்மை பேன்றே பொய் சொல்வது இவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கும். அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் கற்பனை வலம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எந்த இடத்தில் எந்த விதமான பொய் சொல்ல வேண்டும் என்பதை மிகவும் துள்ளியமாக கணித்து பொய் சொல்லும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.